1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:03 IST)

ஸ்டாலின் இருக்கும்போது தமிழகத்தில் வெற்றிடம் என்ற சொல்லுக்கு இடமில்லை: திருச்சி சிவா

தமிழகத்தில் வெற்றிடம் என்ற வெற்றிச் சொல்லுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்தியுள்ளது என்று எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் செயல் தலைவர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று பொதுக்குழுவின் வெளியானது.
 
இந்நிலையில் எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-
 
கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்று கூறும்போது ஒரு புளகாங்கிதம், ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி. ஸ்டாலின் இந்த உயர்வை ஒரே நாள் இரவில் எட்டிடவில்லை. 
 
சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்த கடந்த கால அனுபவம் அவருக்கு உண்டு. தமிழகத்தில் இனி வெற்றிடம் என்ற வெற்றுச் சொல்லுக்கு இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்துகிறது என்று கூறியுள்ளார்.