1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (11:47 IST)

'என் இதயத்தை உடைத்துவிட்டான்' நிக் ஜோன்ஸின் முன்னாள் காதலி வேதனை

பிரியங்கா சோப்ரா நிக்ஜோனஸ் இடையே நடந்த நிச்சயதார்த்தத்தை கேட்டு, நிக்ஜோனஸின் காதலிஅதிர்ச்சி அடைந்தார்.

36 வயதாகும் பிரியங்கா சோப்ரா,  25 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்த பாப்பாடகர் நிக்ஜோனசை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  இதனால் இவர்களின் நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள  பிரியங்கா சோப்ரா வீட்டில் எளிமையாக  நடந்தது. பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வைரமோதிரத்தை நிக் ஜோனாஸ் அணிவித்தார். மேலும் நிக் ஜோனாஸ் பெற்றோர் பிரியங்காவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்தனர்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை கேள்விபட்ட நிக்ஜோனாசின் முன்னாள் காதலியும் ஆஸ்திரேலிய பாடகியுமான டெல்டா கூட்ரெம் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில்  டெல்டா கூட்ரெம்மும், நிக்ஜோனாசும் 2011-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நிக்ஜோனாசை சமரசப்படுத்த டெல்டா கூட்ரெம் முயற்சித்தபோது பிரியங்கா சோப்ராவுடன் காதல் ஏற்பட்டு விட்டது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கும் நிக்ஜோனாசுக்கும் சில பிரச்சினைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது சமரசம் செய்து விடலாம் என்று காத்திருந்தேன். அதற்குள்ளாக பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார்” என்றார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அவர் அழுதார். “நிக்ஜோனாசை தவற விட்டு விட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்ததை அறிந்து எனது இதயம் உடைந்து விட்டது” என்றார்.