கலைஞர் விழாவில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை : காரணம் இதுதான்

Last Modified செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (12:14 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கான புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளாததன் காரணம் வெளியே கசிந்துள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதிக்கான புகழ் வணக்கம் நிகழ்ச்சி வருகிற 30ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.  இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமித்ஷாவுக்கு திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, திமுகவுடன், பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் பரவியது. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியது.
 
இந்நிலையில், அமித்ஷா இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என நேற்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதாலோ, திமுகவுடன் இணக்கமாக செயல்படுவதாலோ எந்த பலனும் இல்லை. திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. அதோடு, கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்த போது, ஸ்டாலின் அவரிடம் பேசிய ஸ்டைல் பாஜகவினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 
stalin

 
எனவே, அந்த கூட்டத்தில் அமித்ஷாவுக்கு அவமரியாதை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும். எனவே, இந்த கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தரப்பில் டெல்லி பாஜக மேலிடத்திற்கு கூறப்பட்டதாம். 
 
எனவேதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை அமித்ஷா தவிர்த்து விட்டார் என தற்போது செய்திகள் வெளியே கசிந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :