தொடர்புடைய செய்திகள்
- ரூம் போட்டு யானைத் தந்தத்தை விற்க முயன்ற கொள்ளையர்கள் - சுற்றி வளைத்த போலீஸ்
- ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கோரிக்கை
- ஷாப்பிங் மாலில் உள்ளாடையுடன் திரிந்த இளம்பெண்
- ஐஸ்வர்யா, யாஷிகாவை கட்டியணைத்த மும்தாஜ் குடும்பத்தினர். உச்சத்திற்கு சென்ற செண்டிமெண்ட்
- பதக்கம் பறிக்கப்பட்டாலும் வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரருக்கு சேவாக் ஆறுதல்
திமுக தலைவரானார் ஸ்டாலின் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது.
தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செயய்வில்லை.
எனவே, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவியை வேறு யாருக்கும் வழங்கும் திட்டம் இல்லாததால் அந்த பதவி நீக்கப்படுவதாக அன்பழகன் அறிவித்தார்.
இதையடுத்து, அறிவாலயத்தில் கூடியுள்ள திமுக நிர்வாகிகளும், வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்களும் ஆர்ப்பரித்து தங்கள் உற்சாகத்தை தெரிவித்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
