ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (14:03 IST)

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.  கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்த  விஜயின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு விஜய் நெற்றில் செந்தூர பொட்டு வைத்த புகைப்படம் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. விஜய் கைகளை கும்பிட்டபடி இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த கொடி முகப்பு பக்கத்தில் இடம்பெற்றது.
 
நெற்றியில் பொட்டு இருக்கும் புகைப்படம் பயன்படுத்தினால், குறிப்பிட்ட கட்சியை சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
 
அதுமட்டுமல்ல, ஒருசிலர் நெற்றியில் பொட்டு வைத்து அறிக்கை வெளியிடுகிறார் விஜய் என்றும் ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேங்கிறார் என அதையும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காத வகையில், எந்த அடையாளமும் இல்லாத புகைப்படத்தை தலைவர் அறிக்கையில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விஜய் பொட்டு வைத்திருந்த புகைப்படத்தை மாற்றியிருப்பது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.