வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:27 IST)

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் கன்னிமாடம் திரைப்படத்துக்குப் பிறகு விமல் கதாநாயகனாக நடிக்கும் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் வழங்குகிறது.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

பள்ளிக்கூட வாத்தியாராக செல்லும் விமல், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்படும் பிரச்சனைகளும் அதை எதிர்த்து அவர் போராடுவதும் கதையாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. முற்போக்குக் கருத்துகளைக் கூறும் படமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் ‘ம பொ சி’ எனப் பெயர் வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது.

இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது “நான் சார் படத்தைப் பார்த்துவிட்டேன். மிகவும் நல்ல படம். பார்க்கும் எல்லோரையும் இன்னொரு முறை பார்க்கவைக்கத் தூண்டும்.  படம் நம்மை சிந்திக்கவைக்கும்.  கூத்துப்பட்டறையில் இருக்கும் விமலின் ரசிகன் நான். அந்தளவுக்கு சிறப்பாக நடிப்பார். விமலுக்கு கண்டிப்பாக இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” எனப் பாராட்டியுள்ளார்.