புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (18:14 IST)

வீட்டில் கியாஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்: குடிசை தொழில் போல் செய்தது அம்பலம்..!

ஆரணி அருகே பெண் ஒருவர் வீட்டில் கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆயிரக்கணக்கான கள்ள சாராயம் காய்ச்சும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் ஆரணி அருகே வடுகசாத்து என்ற கிராமத்தில் வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிசி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது வீட்டில் இருந்து 100 லிட்டர் சாராயம் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran