திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:33 IST)

ஆயுதப்பூஜைக்கே தியேட்டர்களை திறக்க கோரிக்கை!

முதலமைச்சர் பழனிசாமியை இன்று தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசி சில கோரிக்கைகளை முன்வைத்தனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடநத 4 நாட்களுக்கு ,முன்னர் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டது.
 
டெல்லி மும்பை கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருந்த நிலையில் 10 சதவீத இருக்கைகள் கூட நிரம்பாமல் இருந்தது. 
 
இதனால் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சி அடைந்தனர் ஒரு சில திரையரங்குகளில் 4 முதல் 10 பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டருக்கு வருகை தந்திருந்தார்கள் என செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை இன்று தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது ஆயுதப்பூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். 
 
மேலும், திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்பதற்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தியேட்டர்களை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் உரிமம் பெற பொதுப்பணித்துறையிடமே அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.