சினிமா கட்டணத்தை உயர்த்திக் கொள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், தமிழ் நாட்டில் உள்ளள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், Non- AC திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.