திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (11:37 IST)

சென்னை உள்பட தமிழ்நாட்டில் காத்தாடும் தியேட்டர்கள்: ’ஆதிபுருஷ்’ படக்குழுவினர் அதிர்ச்சி..!

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கு மற்றும் ஹிந்தியை அடுத்து தமிழ் மொழியில் மட்டுமே இந்த படம் உருவாகி உள்ளது. ஆனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் தியேட்டரில் மிகக்குறைந்த ஆடியன்ஸ் மட்டுமே ஆடியன்ஸ்கள் இருப்பதாகவும் ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 20 பார்வையாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
முதல் நாள் முதல் காட்சிக்கே இந்த நிலைமை என்றால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருப்பதால் இனி அடுத்தடுத்த நாள்களில் சுத்தமாக ஆடியன்ஸ்கள் வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. 
 
ராமாயண கதையில் தமிழர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தாலும் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran