1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (20:35 IST)

தினமும் 50 கிலோ மீட்டர் ஓடி இளம்பெண் கின்னஸ் சாதனை

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் விகாஸ் மனைவி சுபியாகான் (33). இவர்  மாராத்தான் ஓட்டத்தில் பெண்களின் சாதனையை அதிகரிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடு சாதனை செய்ய  திட்டமிட்டார்.
இந்நிலையில்  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையான ஔமார் 4000 கிமீட்டர் தூரத்தை 80 முதல் 90 நாட்களுக்கும் ஓடி முடிக்க திட்டமிட்டு, இதற்க்காக கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகர் நேரு பார்க்கில் மாரத்தான் ஓட்டத்த ஆரம்பித்தார். 
 
இதற்காக தினமும் அவர் காலையில் 25 கிமீட்டர் , மாலையில் 25 கிமீ என தினமும் 50 கிமி ஓடியெ பல மாநிலங்களை அவர் கடந்தார். இந்நிலையில் இந்த ஓட்டத்தில் 86 ஆவது நாளானா நேற்று நெல்லை வந்து சேர்ந்தார்.அவருக்கு அரசு மாளிகையில் வருவாய் துறை அதிகாரிகள்  வரவேற்பு அளித்தனர். இது கின்னஸ் சாதனை ஆகும். இத்தனை தூரத்தை ஒரு பெண் ஓடிக்கடப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.