புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (12:41 IST)

பூசாரி மகளிடம் சில்மிஷம்? தாக்கப்பட்ட தலித் சிறுவன்: பதறவைக்கும் வீடியோ!

ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவன ஒருவன் கடுமையாக தாக்கப்படும் வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவன ஒருவன் கோவிலுக்கு நுழைய முயற்சித்ததால் உயர் சமூகத்தை சேர்ந்த சிலர் சிறுவனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. 
 
இதனால், அந்த வீடியோவில் சிறுவனை தாக்குபவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த சிறுவன் கோவில் புசாரி மகளிடம் தவறாக நடந்துக்கொண்டதால் அடித்ததாக சிறுவன் மீது புகார் அளித்துள்ளனர். 
 
சிறுவன் கோவிலுக்குள் செல்ல முயன்றதற்காக தாக்கப்பட்டாரா? இல்லை பூசாரியின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதற்காக தாக்கப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 
இருப்பினும் தாழ்த்தப்பட்ட சிறுவனை கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீஸார் அடைத்துள்ளனர். சிறுவனை தாக்கியவர்களையும் கைது செய்து உள்ளனர்.