புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (18:33 IST)

பல ஆண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பெண் : பகீர் தகவல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள வளையமாதேவி என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் அப்பகுதியில் பழைய தங்கம -வைர நகைகளை ஏலத்தில் எடுத்து விற்பனை செய்துவருகிறார்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் இணையதள திருமண சேவை நிறுவனத்தில் திருமனத்திற்குப் பெண் தேடிவந்தார்.
 
அதில் சென்னையைச் சேர்ந்த மேகலா என்ற பெண் பாலமுருகனத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
 
இதனையடுத்து மேகலா அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். பாலமுருகனும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.
 
அப்படி ஒருநாள் மேகலா தனக்குக் குடும்ப பிரச்சனைகள் உள்ளதாகக்கூறி பாலமுருகனிடம் நகை, பணம் போன்றவற்றை வாங்கியுள்ளார்.ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மேகலா வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அவருக்குத் தகவல் தெரியவந்தது.
 
இதுபற்றி பாலமுருகன் விசாரித்துப் பார்த்த போதுதான் மேகலாவைப் பற்றிய உண்மைகள் தெரியவந்தது. அதாவது இதுவரை மேகலா 17 ஆண்களை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி அவர்களிடம் பணத்தைப்பெற்று ஏமாற்றிவிட்டுவாராம். 
 
இந்நிலையில் மேகலாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து தற்போது மேகலா மீது புகார் கொடுக்கவுள்ளதாகத் தகவக் வெளியாகிறது.