புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:34 IST)

ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழா… 4 பேருக்கு கொரோனா

சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர்  கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

தமிழகத்தில் நேற்று, புதிதாக் தொற்று கண்டறியப்பட்டுள்ள 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு பஞ்சாப் சுகாதாரத்துறை 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்று தலைமறைவாக இருப்பவர்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.