வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:13 IST)

சாலையில் கிடந்த ரூ.40,0000 .....போலீஸில் ஒப்படைத்த இருவருக்கு பாராட்டு!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
சத்திய மங்கலம அருகே மகளின் பிரசவ செலவுக்குக் கடன் வாங்கிய பணத்தை சாலையில் தவறவிட்ட முதியவரின் பணத்தைக் கண்டெடுத்த இருவர் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியில், இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி(55).  இவர் கடந்த  நேற்று முன் தினம் சித்தோடு செல்ல் வேண்டி பேருந்து  நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு சாலையில், 500 ரூபாய்  நோட்டுகள் கீழே இருப்பதைக் கண்டு எடுத்துள்ளார். அதில், ரூ.40000 இருந்துள்ளது.

அதன்பின்னர், கோகுல் என்ற நபர் ராஜேஸ்வரியிடம் இதை போலீஸிடம் ஒப்படைக்கலாம் எனக் கூறியுள்ளார். பின்னர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அப்பணத்தை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆவணத்தைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்தனர். எனவே,  ஜோஸ்வா என்ற முதியவர் தன் மகளின் பிரசவ செலவுக்காக ரூ.40 ஆயிரத்தை கடன் வாங்கி வழியில் தொலைத்ததைக் கூறவே, அவரிடம் அப்பணத்தை ஒப்படைத்தனர் போலீஸார்.

பணத்திற்கு ஆசைப்படாமல் அதை போலீஸில் ஒப்படைத்து உரியவருக்கு செல்ல உதவிய ராஜேஸ்வரி மற்றும் கோகுல் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Edited by Sinoj