ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (20:42 IST)

400 வருட போன்சாய் மரங்கள் திருடப்பட்டதால் கசிந்துருகிய தம்பதி

ஜப்பான் நாட்டை சேர்ந்த முதிய தம்பதி, தாங்கள் பொக்கிஷமாக வைத்திருந்த ஏழு போன்சாய் மரங்களை திருடிச் சென்ற திருடனிடம், அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
திருடப்பட்ட மரங்களில் 400 வருட பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90,000 ஆயிரம் டாலர்கள்.
 
அந்த மரங்கள் காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என்றும் எனவே அதற்கு முறையாக நீர் ஊற்ற வேண்டும் என்றும் அந்த தம்பதியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
போன்சாய் மரங்கள் என்பது ஒரு பெரிய மரத்தை போன்று தொட்டிகளில் சிறியதாக வளர்க்க கூடிய மரங்கள். அவை முறையான நிபுணர்களால் வளர்க்கப்பட வேண்டும்.