புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (16:03 IST)

அதிபர் முகமூடி அணிந்து திருடிய திருடன் : வைரலாகும் வீடியோ

பொதுவாக திருடச் செல்லும் திருடன் தான் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற முன்ஜாக்கிரதையாக இருப்பான். அதிலும் தன்னைக் குறித்த எந்தத் தடயங்களும் யாருக்கும் சிக்கிடாமல் இருக்குமாறு கவனமாக இருப்பான்.
அந்த போல்ஆஸ்திரேலியாவில் இரு வித்தியாசமான திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் என்ற பகுதியில் உள்ள பிரசித்தியான வாட்ஸ் கடையில், திருடன் ஒருவன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகமூடியை அணிந்துகொண்டு அங்கிருந்த விலைஉயர்ந்த வாட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கடையின் உரிமையளார் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலிஸார் அந்தக் கடையில் இருந்த கண்காணிபுக் கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தனர்.
 
அதில் திருடன் தன்னை யாரும் பார்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் முகமூடியை அணிந்து வந்து திருடியது பதிவாகியுள்ளது. 
திருடிவிட்டு கடைக்கு வெளியே வந்தபோது தன் கையில் உள்ள பொருள் கீழே விழுந்ததை எடுக்க குனிந்தான். அப்போது அவன் முகத்தில் அணிந்திருந்த முகமூடி கீழே விழுந்தது. அதை ஆதாரமாக வைத்து தற்போது குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.