வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (21:54 IST)

எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி -அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் (FEEDERS) 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை (FEEDERS) சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டு மக்களளுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறது. இந்த நிலையில், மின்னூட்டிகளை (FEEDERS) சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''நேற்று (04.12.2023) காலை 12 மணி நிலவரப்படி 112 மெகாவாட் ஆக இருந்த சென்னை நகரின் தேவை இன்று (05.12.2023) மாலை 7:30 மணி நிலவரப்படி 1,488 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னை மாநகரத்தின் மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் (FEEDERS) 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை (FEEDERS) சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகிய இடங்களின் சில பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் ஈரப்பதம் நிலவி வரும் காரணமாக மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்திற்குட்டப்பட்ட மின் இணைப்புகளை சீரமைப்பதற்கான சிறப்பு அலுவலராக திரு சுதர்சன், மேற்பார்வைப் பொறியாளர், மின்கூட்டு ஆராய்வு மற்றும் தொலைத் தொடர்பு & அலைப்பேசி கோபுரங்களுக்கான மின்சாரத்தினை சீரமைப்பதற்கான சிறப்பு அலுவலராக திருமதி நிறைமதி, மேற்பார்வைப் பொறியாளர் ,தகவல் தொழில் நுட்பம் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை மின் நிலையங்கள், மின்னூட்டிகள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைப்பெற்று வருகிறது. இந்த அசாதாரணமான சூழலில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வந்தாலும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களால் மின் விநியோகம் சீரமைப்பதில் ஏற்படும் தாமதத்திற்குரிய சூழலை புரிந்து கொண்டு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.