செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (16:09 IST)

பேருந்து படியில் நின்று பயணம் செய்த மாணவன் பலி!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் குதிரைக்கல்மேடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் தங்கமணி. இவரது மகன் திவாகர், இன்று பள்ளிக்குச் சென்றபோது, பள்ளிபேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, பேருந்து ஓட்டு நர் பிரேக் பிடித்தபோது,   படியில் நின்றிருந்த திவாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று  பலியான மாணவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj