1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (14:35 IST)

முருகனை நேரில் சந்தித்த நளினி.. கண்ணீர் மல்க நலம் விசாரித்தார்

murugan nalini
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த கணவன் மனைவியான முருகன், நளினி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
 
ஆனால் விடுதலையான பின்னரும்ன் இருவரும் ஒரே வீட்டில் இருக்க முடியாத நிலையில் முருகன் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று திருச்சி வந்த நளினி,  கணவர் முருகனை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க அவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தனது மகள் லண்டனில் வசித்து வருவதாகவும் கணவர் முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துபூர்வமாக மனு அளிக்க உள்ளதாக கூறினார்.
 
முருகன் உள்ளிட்ட நால்வரையும் சந்தித்துப் பேசியதாகவும் முருகன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் முகாம்களில் செய்து தரப்பட்டு உள்ளது என்றும் அவரவர் சொந்த நாடுகளுக்கு செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
Edited by Siva