1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (14:26 IST)

திமுக பொய் சொல்கிறது: மழைநீர் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

Edappadi
மழைநீர் வடிந்து விட்டதாக திமுக அரசு ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் மக்களிடம் திமுக பொய் சொல்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் உள்ள மழை வெள்ள பாதிப்புகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மழையை வைத்து நான் அரசியல் செய்கிறேன் என்று கூறும் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார் 
 
மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் திமுக ஆட்சி காலத்தில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்
 
சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் சென்னையில் சொட்டு நீர் கூட தேங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி முழுக்க முழுக்க பொய் என்றும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர் என்பது தான் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
திமுக ஆட்சியில் மக்கள் படகில்தான் செல்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் கூட அமைக்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Mahendran