அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிய வகுப்பறைகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது.
இந்த ஆட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் மாணவர்களுக்கும், மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டபேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj