திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (12:23 IST)

ஆதரவற்ற மகளிர் 127 பேருக்கு ஆட்டோ பரிசாக வழங்கிய ரோட்டரி ஆளுநர்!

ஆதரவற்ற மகளிர் 127 பேருக்கு ரோட்டரி சங்கம் மூலம் இலவசமாக ஆட்டோ வழங்குவது உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என   முதல் பெண் ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி மதுரையில் பேட்டி
 
மதுரை திண்டுக்கல் தேனி கரூர் புதுக்கோட்டை திருச்சி பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000 ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த Rtn.ஆனந்த ஜோதி  தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர் வருகிற 2.07.2023 அன்று  பதவி ஏற்கின்றார். 
 
இதை முன்னிட்டு அவர் மதுரை விஸ்வநாதபுரம்  மதுரை  ரோட்டரி ஹாலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ரோட்டரி ஆளுனராக முதல் பெண் ஆளுநராக நான் தேர்ந்து எடுக்கப்பட்ருக்கிறேன் . ரோட்டரி சங்கம் சமுதாயத்திற்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக போலியோ ஒழிப்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து  சேவை செய்து உலகிலேயே போலியோ இல்லை என்பதை உருவாக்கியுள்ளது (இரண்டு நாட்டை தவிர) என்றார்.
 
ஆதரவற்ற மகளிர்க்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் பெற்றுகொடுத்து அதோடு இ-ஆட்டோ வழங்கி எங்களது ரோட்டரி மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சவாரி எடுக்க ஏற்பாடு செய்து அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர்த்த ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டுக்குள் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ  வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும் என்றார்.
 
மேலும், பெண் குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளில் அதாவது சுகாதார வசதி இல்லாத பள்ளியை கண்டெடுத்து கழிப்பறை கட்டிக் கொடுப்பது என்பது உள்ளிட்ட  12 மாதமும் 12 திட்டங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ரோட்டரி மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.
 
அதோடு வருகிற 01.07.2023  அன்று மதுரையில் லேடி டோக் கல்லூரியில்  மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற
இருக்கிறது என்றார். பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், உதவி ஆளுநர் கௌசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித்திரு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.