1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : புதன், 10 மே 2023 (10:40 IST)

கெட்ட வார்த்தையில் திட்டிய ஆட்டோக்காரர்... நடுரோட்டில் பஜாரி மாதிரி சண்டைபோட்ட நடிகை!

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மன பெண்ணே, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் டிமான்ட்டி காலனி 2, இந்தியன் 2 வைத்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், கெட்டவார்த்தை பேசியிருக்கிறீர்களா? என கேட்டதற்கு... நியூஸ் சேனலில் வேலைப்பார்த்துவிட்டு வீட்டுக்கு போகும்போது ஸ்கூட்டியில் சென்றிருக்கும் போது ஒரு ஆட்டோகாரர் என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசிவிட்டார். உடனே எனக்கு கோபம் வந்து வண்டியில் நிறுத்திவிட்டு நடுரோட்டில் கண்டபடி சண்டைபோட்டு அவர் மன்னிப்பு கேட்கும் வரை விடவே இல்லை என கூறியுள்ளார்.