திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (15:06 IST)

தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சிவசங்கர் உறுதி..!

Bike Taxi
தமிழகத்தில் பைட் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிப்பட கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் தங்கள் சொந்த இரு சக்கர வாகனங்களையும் தனியார் நிறுவனத்துடன் இணைத்து பைக் டாக்ஸியாக இயக்கி வருகின்றனர். 
 
ஆட்டோ மற்றும் டாக்ஸிகளின் கட்டணத்தை விட பைக் டாக்ஸி கட்டணம் குறைவு என்பதால் பலர் பைக் டாக்ஸிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறிய போது தமிழக அரசு பைக் டாக்ஸிக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் பைக் என்பது தனி நபர் பயன்படுத்தும் வாகனம் என்றும் வாடகைக்கு விடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 
 
பைக்டாக்ஸிகளை பயன்படுத்தக் கூடாது என்பது தமிழக அரசு நிலை என்றும் இது தொடர்பாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva