1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (09:55 IST)

கோவில் இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை உயர்கிறதா?

கோவில் இடங்களில் கடை வைத்து உள்ளவர்களுக்கு வாடகை உயரும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவர்களுக்கு வாடகை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்ய செய்து வருவதாகவும் புதிய வாடகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தது குறித்து அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் எவ்வளவு சொத்து உள்ளது என்பதை இணையதளங்களில் பதிவு செய்யவும் சமீபத்தில் உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கோயில் இடங்களை யாருக்கும் பட்டா கொடுக்க முடியாது என்றும் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில் இடங்களில் உள்ள கடைகளுக்கு தற்போது மிகக் குறைந்த வாடகை மட்டுமே பெறப்பட்டு வருவதால் விரைவில் வாடகை உயரும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.