செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 6 நவம்பர் 2025 (11:58 IST)

திமுக - தவெக இடையேதான் போட்டி! அதிமுகலாம் ரேஸ்ல இல்ல! - விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்!

ttv dinakaran

நேற்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என சொன்னதை டிடிவி தினகரனும் ஆமோதித்து பேசியுள்ளார்.

 

கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்று தவெக பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில்தான் கூட்டணி என பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பேசிய விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக - தவெக இடையேதான் போட்டி என பேசியிருந்தார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “விஜய் சொன்னதுபோல வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். விஜய் தலைமையில் அமையும் கூட்டணி வலுவாக அமைந்தால் கடுமையான போட்டி இருக்கும்” என கூறியுள்ளார்.

 

மேலும் “மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. ஆனால் அவர் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K