இனி தங்கத்தை கனவுலதான் பாக்கணும்.. ஒரே அடியாக எகிறிய தங்கம் விலை! – கிராம் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.600 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த மாதம் முதலாகவே இந்தியாவில் தங்கம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்பட்டது. வேகமாக விலை உயர்ந்து வந்த தங்கம் சமீபத்தில் சவரனுக்கு ரூ.54 ஆயிரத்தை தாண்டியது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,855க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையே எழுந்துள்ள போரின் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
இப்படியே போனால் இன்னும் சில வாரங்களுக்கும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கிடுகிடு விலை உயர்வால் எளிய மக்கள் தங்கத்தை இனி கனவில்தான் காண முடியும் போல என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K