வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (16:07 IST)

லவ் மேட்டர்: காலேஜ் கிரவுண்டில் மல்லுக்கு நின்ற கோஷ்டிகள்!

ஆந்திர மாநிலமான கன்னூலில் மாணவி ஒருவரை இருவர் காதலித்ததால் இரு தரப்பினருக்கு மத்தியில் பெரும் சண்டை உருவாகி அடிதடியில் முடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
டோன் என்னும் பகுதி ஆந்திர மாநிலம் கன்னூல் மாவட்டத்தில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இதுதான் பெரிய கல்லூரி. எனவே மாணவ மாணவிகள் பலர் இங்கு படித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த கலூரியில் படிக்கும் ஒரு மாணவியை இரு நபர்கல் காதலித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணை யார் காதலிப்பது என்ற பிரச்சனை ஒரு நபர்களுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. 
 
இந்த லவ் சிக்கல் நாளாக நாளாக பெரிய பிரச்சனையாக் வளந்துக்க்கே வந்தது. ஒரு கட்டத்தில் பிரச்சனை உச்சத்தை எட்டி கல்லூரி மைதானத்தி சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சண்டையை பலர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 
 
இந்த சண்டையின் போது இருவர் காயமடைந்துள்ளனர். அதோடு, சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ள போலீஸார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மேலும், இந்த நிகழ்வு கல்லூரிக்கு அவமானம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.