கடையில் நைசாக...செல்போன் திருடிய நபர்... பரவலாகும் சிசிடிவி வீடியோ !

cellphone
Last Updated: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:45 IST)
நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஒரு இளைஞர் செல்போன் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரவலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதி எதிர்மேடு. இங்குள்ள செல்போன் கடையில் புதுவகையான செல்போன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தக் கடையில் செல்போன் திருட்டு போனதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
 
அதனடிப்படையில், குறிப்பிட்ட கடைக்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர் கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருக்க மற்றொருவர், அங்குள்ள ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடியது தெரியவந்தது.
cctv
 தற்போது, போலீஸார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :