1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:05 IST)

காதலிக்காக 21 வருடங்கள் காத்திருக்கும் நபர் !

இந்த உலகில் காதல் என்பது எல்லா உயிரினங்களிடமும் உண்டு. அது மனிதனிடம் மட்டும்தான் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வைக்கிறதோ என்பதுபோல் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் நடப்பதுதான் காதல் மட்டும் மனிதர்களுக்குச் சொந்தமானது என்ற பகுத்தறிவுள்ள தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. பிரிந்து போன காதலிக்காக ஒருவர் 21 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு 40 வயதாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது காதலி இவரைவிட்டுப் பிரிந்து சென்ற்சார். எனவே அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் நாகராஜ் ஊரிற்கு வெளியே ஒரு பாறைக்கு அருகில் வாழ்ந்து வருகிறார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.