வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (21:24 IST)

ஜெயமோகனை அடித்தவர் திமுகவை சேர்ந்தவரா? திடுக்கிடும் தகவல்

பிரபல தமிழ் எழுத்தாளர், பல விருதுகளை வென்றவர், கோடிக்கணக்கான வாசகர்களை பெற்றவர் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், சாதாரண ஒரு புளித்த மாவு விஷயத்திற்காக பிரச்சனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவை விற்றவர் ஜெயமோகனை தாக்கியதால் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு அடித்தவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது
 
மேலும் இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த ஜெயமோகன், 'அந்த கடைக்காரர் குடிகாரர் என்றும் தன்னிடம் பிரச்சனை செய்தது போல் பலரிடம் பிரச்சனை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர் திமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயமோகனை அடித்தவர் பெயர் செல்வம் என்றும், அவர் திமுக 17வது வட்டப் பிரதிநிதியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் செல்வத்தை போலீசார் விசாரணை செய்தபோது போலீஸ் நிலையத்திற்கு திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் குவிந்துவிட்டதாகவும், திமுக நகரச் செயலாளர் ஒருவர் ஜெயமோகனிடம் சமாதானம் பேசியதாகவும், ஆனால் ஜெயமோகன் திரையுலக பிரபலம் என்பதாலும் இந்த விஷயம் மீடியாவில் வந்துவிட்டதால் திமுகவினர் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றது போன்ற பல சம்பவங்களில் திமுகவின் பெயர் கெட்டுப்போயுள்ளதால் இந்த விஷயத்தில் கட்சி தலையிடாது என்றே கருதப்படுகிறது