திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:41 IST)

மதபோதகரின் போதனையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கென்ய நாட்டில்  மதபோதகரின் போதனையை கேட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

கென்ய நாட்டிலுள்ள கிழக்குப் பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி, இருக்கும் சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இந்த நகரில், குட் நியூஸ் இன்டர் நேசனல் தேவாலயம் இயங்கி வருகிறது.

இந்த ஆலயத்தின் பாதிரியார் பால் மெக்கன்சி. இவரது பண்ணையில், உள்ள மக்கள் உடல் மெலிந்த  நிலையில், பலர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருந்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்க், 4 பேர் சடலமாகக் கிடந்தனர். 1 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்..

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்த போலீஸார், பாதிரியார் பால் மெக்கன்சி, உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவைக் காணலாம் எனக் கூறியதால், பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிரியார் பால் மெக்கன்சியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாலிண்டி நகரில், 800 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையில்,  213 பேரைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில், தற்போதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.