1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ration stores are opened in Sunday also

ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

தீபாவளி
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் ஐந்தாம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாட இருப்பதை அடுத்து தீபாவளி பலகாரங்கள் செய்வதற்காக பொருட்களை பொதுமக்கள் வாங்குவார்கள். அதற்கு வசதியாக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 மேலும் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தீபாவளி பொருட்களை ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை: அரசாணை வெளியீடு!