முகேஷ் அம்பானியை முந்திய தமிழர் ! எதில் தெரியுமா ?

shiv nadar
sinoj kiyan| Last Updated: புதன், 16 அக்டோபர் 2019 (21:09 IST)
நாட்டில் அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர்களில் ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். 
ஹெசிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நடார் ஒரு தமிழர். இவர் சமுதாயத்தில்  ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அதிகளவில் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் ரூ. 826 கோடிகள் சமூக பணிகளுக்காக நன்கொடை கொடுத்துள்ளார் ஷிவ்நாடார்.கம்பெனிகள் சட்டத்தின் படி கார்பரேட் நிறுவங்கள் தங்களின் வருவாயில் 2 % சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட வேண்டுமெனபது விதி. இந்நிலையில் நாட்டில் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷிவ்நாடார் வேறு யாரையும் விட அதிகளவில் நன்கொடை கொடுத்துள்ளார்.

இதற்கடுத்து விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ரூ. 453 கோடி நன்கொடை வழங்கி இரண்டாம் இடத்தில் உள்ளார். நாட்டில் முதல் இடத்தில் உள்ள கோடிஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானி ரூ. 402 கோடி நன்கொடை கொடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

 
ஷிவ்நாடார் , ரூ 15 கோடி கொடுத்து, தமிழகத்தில் தான் படித்த பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையான வசதிகள் செய்து கொடுத்துள்ளது பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :