1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (20:23 IST)

சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏற்பாடு...அரசு தீவிரம் !

கோடை காலம் வந்ததுதான் வந்தது அடித்த வெயிலுக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையுமே தண்ணீர் பஞ்சத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த மே மாதத்தில் தான் மக்கள் தண்ணீருக்காக படும் பாடுகள் சொல்லி மாளாது.
இந்நிலையில் சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்க்காக, வேலூர் ஜோலா பேட்டையில் இருந்து விஷேச ரயில்களின் மூலமாக தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
இதற்கு மத்திய ரெயில்வே நிர்வாக இதுவரை அனுமதி அளிக்காமலேயே இருந்தது. ரயில்வே நிர்வாகம் தற்போது அனுமதி அளித்தால் இனிமேல் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரமுடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், ஜோலார் பேட்டை மேட்டு சரக்குக் குப்பத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர் தேக்க தொட்டி, பார்சம் பேட்டை , கேதாண்டப்பட்டி ரெயில்வே கேட் அருகில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளை அதிகாரிகள் 10 பேர் ஆய்வு செய்துள்ளனர்...ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீரை கொண்டு செல்ல ரூஉ. 65 கோடி நிதி செய்யப்பட்டுள்ளது.
 
ரயில்மூலம்  தண்ணீர் கொண்டு  செல்லும் திட்டத்திற்கு ஆகும் செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம்  கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.எனவே சென்னை மக்களின் தாகம், தண்ணீர் பிரச்சனை விரைவில் தீரப்போகிறது.