1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The man who lined to get pongal gift dead

பொங்கல் பரிசுப்பணம் வாங்க வரிசையில் நின்றவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகிறது
 
இன்று முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த பொங்கல் பரிசுகளை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வாங்க நீண்ட வரிசையில் ரேஷன் கடை முன் பொது மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அனைகுப்பம் என்ற பகுதியை சேர்ந்த நடராஜ் என்ற வாலிபர் பொங்கல் பரிசை வாங்குவதற்காக இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த சம்பவத்தால் பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
அடுத்த கட்டுரையில்
”காங்கிரஸை ஏன் திமுக எதிர்க்கவில்லை?”.. ஸ்மிரிதி இரானி கேள்வி