1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு! – இன்று முதல் விநியோகம்!
தமிழகமெங்கும் உள்ள நியாய விலைக்கடைகளில் இன்று முதல் 1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் பொங்கல் பரிசு பொருட்களும், ரொக்கமும் தமிழக அரசால் மக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதமே இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தாலும் உள்ளாட்சி தேர்தலால் பரிசு பொருட்கள் வழங்குவது தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு பையும், 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,000 ரூபாய் ஆகியவை இதன்படி வழங்கப்படும்.
இன்று தொடங்கி 12ம் தேதி வரை இந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.