வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (09:44 IST)

வேதா நிலையம் அரசுடைமை: அரசிதழில் வெளியான ஜெயலலிதாவின் பொருட்கள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இதுகுறித்த விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட  ஏற்கனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அரசிதழில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
 
தங்கம்: 4.372 கிலோ 
வெள்ளி: 601.424 கிலோ 
ஏசி: 38 
பர்னிச்சர் பொருட்கள்: 556 
பிரிட்ஜ்கள்: 10 
சமையலறை பொருட்கள்: 6514 
பூஜை பொருட்கள்: 15
உடை வகைகள்: 10,434 
தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள்: 29
கிச்சன் பொருட்கள்: 221
எலக்ட்ரிக்கல் பொருள்கள்: 251
புத்தகங்கள்: 8376 
ஸ்டேஷனரி பொருட்கள்: 253 
பர்னிச்சர் பொருள்கள்ள் 1712 
காஸ்மெட்டிக் பொருட்கள்ள் 108 
கடிகாரங்கள்: 6
 
மொத்தம்: 32,721 பொருட்கள்