1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (09:56 IST)

வீண் விளம்பரத்திற்காக நாடகமாடிய இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் கைது

சோழவரம் அருகே வீண் விளம்பரம் தேட, தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தனது காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் தன் காரின்மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், இதில் அதிர்ஷ்டவசமாக தானும் தன் நண்பர்களும் உயிர் பிழைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த விபத்தில் தனது கார் முற்றிலுமாக சேதமடைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து வழக்குபதிந்து போலீஸார் விசாரணை செய்ததில், காளிகுமார் சொன்னவாறு அப்படிப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை என்றும் விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்துள்ளனர்.