1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (20:41 IST)

வரலாற்று உண்மைகளைப் புதைக்கும் மாபெரும் துரோகம்.- திருமா

'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே' என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இது அயோத்தி தீர்ப்பைப் போலவே அமைந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே' என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இது அயோத்தி தீர்ப்பைப் போலவே அமைந்துள்ளது. எனவே, அதிர்ச்சி இல்லை. ஆனால் அச்சம் மேலிடுகிறது. கடைசி நம்பிக்கையாகவுள்ள உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பீடு கேள்வி குறியாகி உள்ளது.

அரசமைப்புச்சட்டம் உறுப்பு எண்-370 இடைக்கால ஏற்பாடு என்பது வரலாற்று உண்மைகளைப் புதைக்கும் மாபெரும் துரோகம்.

இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு இது வழிவகுக்கும். யாரைக் கடிந்து கொள்வது?  இனி என் செய்வது? என்னும் இயலாமையே எஞ்சுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.