வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (09:41 IST)

கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! – திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூரில் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்க்க சென்ற சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள வீரக்குமாரசுவாமி கோவிலில் கடந்த 3 நாட்களாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவில் திருவிழாவிற்காக சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மக்களும் சென்று வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் இரவில் நடைபெறும் இசை கச்சேரியை காண்பதற்காக பாலிடெக்னிக்கில் படிக்கும் 17 வயது மாணவி அவரது தாயாருடன் சென்றுள்ளார். கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவி திடீரென்று காணாமல் போயுள்ளார். மாணவியை தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் விடியற்காலை 3 மணியளவில் மாணவி மிகவும் சோர்வாக வீடு வந்து சேர்ந்துள்ளார். விசாரித்ததில் 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், பிரபாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் 4 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K