புதுச்சேரி சிறுமியை தேடுவதில் அலட்சியம் காட்டிய போலீஸார்! முதல் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!
புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் முதல் அமைச்சர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை 6 பேர் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து சாக்கில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதிக் கேட்டு பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு எழுந்துள்ளது.
இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்த முதல்வர் ரெங்கசாமி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழுவை ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைத்துள்ளார்.
இன்று முதலே விசாரணையில் இறங்கிய சிறப்புக் குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.
அதேசமயம் சிறுமி காணாமல் போனதை புகாராக அளித்தது முதலாகவே முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீஸார் மெத்தனமாக நடந்துக் கொண்டதாகவும், அவர்கள் விரைந்து தேடியிருந்தால் சிறுமியை மீட்டிருக்கலாம் என்றும் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் மொத்த பேரையும் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ரெங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K