செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:02 IST)

மாணவனை கொல்ல முயன்ற கும்பல் : சென்னையில் தொடரும் கொலைவெறி சம்பவம்

அம்பத்தூர் அடுத்துள்ள அயப்பாக்கம் தேவி நகரில் வசித்து வருபவர் வேணு. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும்  பாபு என்ற மகன் உள்ளார். அவர் அருகே உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றைய தினத்தில் பாபு, டியூசன் முடிந்து இரவு தனது வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது இருவர் அவரை பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் பாபு அவர்களைப் பார்க்கவில்லை. 
 
தன் வீட்டுக்குச் சென்ற பாபு களைப்பாக இருப்பதாகக் கருதி மாடிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எட்டிக் குதித்து பாபுவை நெருங்கி அவரை சரமாறியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
 
அப்போது பாபு வலியால் கதறியுள்ளார். அவரது கூச்சல் கேட்டு வந்த பாபுவின் பெற்றோர் தங்கள் மகன் ரத்தம் பீறீட கீழே விழுந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அதன்பின்பு பாபுவை  ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாபுவுக்கு தீவிரமான சிகிச்சை அளிகப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.