வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (11:15 IST)

பட்டாக்கத்தியுடன் நுழைந்த கும்பல்.. ஒருவர் கொலை! – மதுரை சித்திரை திருவிழாவில் அதிர்ச்சி!

Madurai Chithirai Thiruvizha
மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த சிலர் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இன்று சிகர நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதை காண பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் திருவிழாவில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே பட்டாக்கத்தியுடன் சிலர் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் ஆழ்வார்புரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சிவகங்கையை சேர்ந்த சோனை என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K