வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (07:20 IST)

பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! பக்தர்கள் கோவிந்தா கோஷம்..!

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நிகழ்ந்த நிலையில் பக்தர்கள் ஏராளமான ஒரு குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகை ஆற்றில் இன்று பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் கள்ளழகர் இறங்கியபோது கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளந்தது என்றும் ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தை கண்டு ரசித்து அழகரின் அருளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் என்று நிகழ்வதை அடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமி அன்று நிகழும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சரியாக இன்று காலை 6.04 மணிக்கு நடைபெற்றது என்பதும் இந்த கண்கொள்ளாக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து பார்த்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

மேலும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் நிகழ்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva