1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (19:22 IST)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிய முதல்வர்.மு.க.ஸ்டாலின்

Stalin
டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே இருப்பார் என 2013 ஆம் ஆண்டில் சட்டத்தை கொண்டு வந்திருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே இருப்பார் என 2013 ஆம் ஆண்டில் சட்டத்தை கொண்டு வந்திருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

‘’அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க  வேண்டும். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்த மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி. எல்லோருக்கும் கல்வி என மாற்ற முடியும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும்  வேந்தராக  முதல்வரே இருக்க வேண்டும் என கூறி அதற்காக சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் சுசீலாவுக்கு  மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.