திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (17:54 IST)

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ பற்றியது: பயணிகள் அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நிறைய குப்பைகள் நிரம்பி உள்ளது. இன்று பிற்பகலில் திடீரென அந்த குப்பைகளில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். திடீரென்று ஏற்பட்ட தீயால் கோயம்பேடு பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
 
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.