திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (14:11 IST)

''உங்களுக்குள் இருக்கும் போராட்ட குணம் வியக்க வைக்கிறது''...ராகுல் காந்தி பிறந்த நாளில் பிரபல நடிகை வாழ்த்து

rahul gandhi
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அதன்படி,  இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா   மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில்,  நடிகை காயத்ரி ரகுராம் தன் டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்த  நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
 
gayathri

இதுபற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது: 

‘’உங்கள் நாட்டையோ, கட்சியையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ நீங்கள் கைவிடவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அவர்கள் உங்களை எப்படி கேலி செய்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்குள் இருக்கும் போராட்ட குணம் என்னை வியக்க வைக்கிறது, விடுதலை பெற்ற போராளிகளின் ரத்தம் ஆசே. பிறந்தநாள் வாழ்த்துக்கள். ‘’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில்’’இன்று பிறந்தநாள் காணும்  ராகுல் காந்தி அவர்களுக்கு எமது இனிய வாழ்த்துகள்.

சனாதன ராஷ்ட்ராவை  அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைச் சிதைக்கும் சாதிய- மதவாத  சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை சூட வாழ்த்துகிறோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் என்றென்றும் துணை நிற்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.