திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (18:59 IST)

6 மாதங்களுக்கு முன் இறந்தவர் தடுப்பூசி போட்டுகொண்டதாக வந்த எஸ்.எம்.எஸ்!

6 மாதங்களுக்கு முன் இறந்தவர் தடுப்பூசி போட்டுகொண்டதாக வந்த எஸ்.எம்.எஸ்!
ஆறு மாதங்களுக்கு முன் இறந்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவடைய அவர் பயன்படுத்திய மொபைலுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிபந்தனையும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் சிலர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பதிலாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக சான்றிதழ் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு இருப்பதாகவும் அதற்கு ஒரு சில மருத்துவர்களும் ஒத்துழைப்பு தந்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் போளூர் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்னர் இறந்த கூலித்தொழிலாளி நாராயணன் என்பவர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்திய மொபைலுக்கு எஸ்எம்எஸ் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போளூர் மருத்துவமனையில் உறவினர்கள் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது